தமிழிசை

A singing platform for tamil singing kids and adults

மிசௌரி தமிழ்ச்சங்க தமிழிசை விழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படும்.

Tamizhisai Vizha music festival to allow for the young musicians in the St. Louis area to perform in a professional manner. It is a formal function, where music students apply ahead of time to perform, practice with their classical music teachers for the performance and then have an opportunity to showcase their training and talent to an appreciative audience. There are church choirs that come in and sing in Tamil alongside children as young as six years-old who are learning Tamil classical music. It is a proud and joyous occasion for us all.

தமிழிசை மரபு

இசைத்தமிழும் தமிழிசையும்: பண்டைக் காலத்தில் தமிழ்மொழியானது "இயல், இசை நாடகம்' என்னும் மூன்றும் கலந்து முத்தமிழாக விளங்கிற்று. இதனால் அக்காலத்தில் இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் முத்த மிழையும் கற்றவர்களே பெரும் புலவராக ச், சான்றோராக மதிக்கப்பெற்றனர். ஆனால் பிற்காலத்தில் கீதம் (இயல்தமிழ்), வாத்தியம் இசைத்தமிழ் நிருத்தியம் (நாடகத்தமிழ் ஆகிய மூன்றும் தனித்தனியாக ஆனதுபோல், முத்தமிழும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டது. தமிழிசை என்பது தமிழில் செய்யுள்களையோ, பாடல்களையோ எழுதி அவற்றிற்கு இசையமைத்துப் பாடுவதைக் குறிக்கும். இது இப்பொழுது வளர்ந்துவரும் தமிழிசை இயக்கம் போன்ற ஒரு புதிய பரிணாமத்தைக் குறிக்கும். ஆனால் இசைத்தமிழ் என்பது, சங்க காலத்திலிருந்து தோன்றி வளர்ந்து வருவது முத்தமிழில் ஒன்றாக இருப்பது. "இசையோடு தமிழ்ப்பாடல் மறந்தறியேன்" -  என்னும் திருஞானசம்பந்தரின் பாடலை ஒத்தது. எனவே இது இசையும் தமிழுமாக, ஒன்றாகப் பின்னிப்பிணைந்து, பாடலாசிரியரின் மனத்திலிருந்து தோன்றுவது பாடல் எழுதி அதற்கு இசையமைக்காமல், பாடும்பொழுதே இயலும் இசையுமாகக் கலந்து வருவது. எனவே இதனை இசைத்தமிழ் என்பதே சாலப்பொருந்தும் என்றாலும் பழக்க வழக்கம் கருதி இந்த இயல் தமிழிசை என்று அழைக்கப்பெறுகின்றது.

தமிழிசையின் தொன்மை:

மூன்று சங்கமும் வளர்த்த தமிழிசை தமிழர்களின் முதல் சங்கமானது தென்குமரி நாட்டில் (குமரிக் கண்டம்), தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு கி.மு.9760 முதல் கி.மு.5320 வரை 4440 ஆண்டுகள் நடைபெற்றது. இதில் 7 தென்நாடு, 7 மதுரை நாடு, 7 முன்பாலைநாடு 7 பின்பாலைநாடு 7 குன்றநாடு, 7 குணகரைநாடு, குறும்பனை நாடு ஆகிய 49 நாடுகள் இடம்பெற்றிருந்தன. இதனைப் பாண்டியன் காய்சினவழுதி முதல் கடுங்கோன் வரை 89 பாண்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். அகத்தியர் தலைமைப் புலவராவார். இதில் அகத்தியம், பெருநாரை, பெருங்குருகு பரிபாடல்கள் ஆகிய இசைத்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் இடம்பெற்றிருந்தன. அதன்பிறகு ஏற்பட்ட நிலச்சிதைவின் காரணமாக இடைச்சங்கமானது கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.மு. 5320 முதல் கி.மு.1620 வரை 3700 ஆண்டுகள் நடைபெற்றது. இக்காலத்தில் பாண்டியன் வெண்டேர்ச்செழியன் முதல் முடத்திருமாறன் வரை 59 பாண்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். தொல்காப்பியர் தலைமைப் புலவராவார். இதில் பெருங்கலி, குருகு இசைநுணுக்கம், பரிபாடல்கள் ஆகிய இசைத்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் இயற்றப்பெற்றன. அதன்பிறகு ஏற்பட்ட பூமி அழிவின் காரணமாக கடைச்சங்கமானது தற்காலத்திலுள்ள மதுரை நகரில் கி.மு.1620 முதல் கி.பி.230 வரை 1850 ஆண்டுகள் நடைபெற்றது. இக்காலத்தில் பாண்டியன் முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பாண்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். நக்கீரன் தலைமைப் புலவராவார். இதில் சிற்றிசை, பேரிசை, பஞ்சமரபு, கூத்தநூல், பரிபாடல்கள் ஆகிய இசைத்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் இயற்றப்பெற்றுள்ளன.

 

மிசௌரி தமிழ்ச்சங்க தமிழிசை நிகழ்ச்சி காணொளிகள்

    தமிழிசைப் பற்றிய இலக்கண நூல்கள்:

    'சிலப்பதிகாரம்' என்னும் முத்தமிழ்க் காப்பியத்திற்கு உரையெழுதிய அடியார்க்குநல்லார், அவரது காலத்தில் வழக்கத்திலிருந்த சில சங்ககால நூல்களைக் குறிப்பிடுகின்றார். அவை "இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சபாரதீயம், பஞ்சமரபு, பெருங்குருகு (முதுகுருகு, பெருநாரை (முதுநாரை ஆகிய இசைத்தமிழ் நூல்களும், குணநூல், சயந்தம், செயிற்றியம், பரதசேனாபதியம், பரதம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், முறுவல் ஆகிய நாடகத் தமிழ் நூல்களுமாகும். மேலும் அகத்தியம், கூத்தநூல், நூல் என்னும் நாடகத்தமிழ் நூல்களும், தாளவகையோத்து, தாளசமுத்திரம் என்னும் தாள நூல்களும் சங்ககாலத்தில் தோன்றிய இசை இலக்கண நூல்களாகும். மற்றும் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்ககால நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களிலும் தமிழிசை வளம் மிகுந்து காணப்படுகின்றன. மேலும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியரும், திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகரும். சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அரும்பத உரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் இசைத்தமிழின் நுணுக்கங்களை நன்றாக விளக்கிக் காட்டியுள்ளனர் பிங்கல நிகண்டு, சேந்தன் திவாகரம் ஆகிய நிகண்டு நூல்களிலும் தமிழிசை இலக்கணமரபு மிகுந்து காணப்படுகின்றன.

    போற்றுதலுக்குரிய தமிழிசை அறிஞர்கள்

      தமிழிசை அறிஞர்கள்  ஆபிரகாம் பண்டிதர், தண்டபாணி தேசிகர், தர்மபுரம் சுவாமிநாதன், திருத்தணி சுவாமிநாதன்

     

    தமிழிசை அறிஞர்கள்  ப. சுந்தரேசனார், முத்துக்கந்தசாமி தேசிகர், மம்மது

     

    தமிழிசை அறிஞர்கள்  பாபநாசம் சிவன், முத்துத்தாண்டவர், ஊத்துக்காடு வேங்கடகவி, பெரியசாமி தூரன், மாரிமுத்து

     

    தமிழிசை அறிஞர்கள் அருணாசலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை

     

    ஏழிசையின் பிறப்பு:

    இசையில் ஏழு சுவரங்கள் உள்ளன. இது எல்லா நாட்டு இசைமுறைக்கும் பொதுவாக உள்ளது. தமிழ்மொழியில் ஆஈ.ஊ.ஏ.ஐ.ஒ.ஒள என்னும் 7 நெடில் எழுத்துக்களும், அ.இ, உ,எ,ஒ என்னும் 5 குறில் எழுத்துக்களுமாக மொத்தம் 12 உயிர் எழுத்துக்கள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டே தமிழிசையிலும் 7 சுவரங்களும், 12 சுவர ஸ்தானங்களும் வகுக்கப்பெற்றுள்ளன. ஐ, ஒள என்ற இரண்டு எழுத்துக்களுக்குக் குறில் எழுத்துக்கள் இல்லாததுபோல், இசையிலும் சப என்ற இரண்டு சுவரங்களுக்கும் குறை சுவரங்கள் இல்லை. இதனை "ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒளவெனும், இவ்வேழெழுத்தும் ஏழிசைக்குரிய" என திவாகரம் நிகண்டும், "ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்றேழும், ஏழிசைக்கெய்தும் அக்கரங்கள்" என பிங்கல நிகண்டும் குறிப்பிடுகின்றன. இந்த ஏழு சுவரங்களையும் முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று அழைப்பர். இயற்கையில் ஏற்பட்டுள்ள பறவை, மிருகங்களின் ஒலிகளிலிருந்து தோன்றியவைகளே இந்த ஏழு சுவரங்கள். இவை மயில், மாடு, ஆடு, அன்னம் (கொக்கு அல்லது அன்றில்), குயில், குதிரை, யானை ஆகியவற்றின் ஒலிகளிலிருந்து முறையே சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய சுவரங்கள் தோன்றியுள்ளன. 

    தமிழிசை விழா காணொளி