மகளிர் மட்டும்

மிசெளரி தமிழ்ச்சங்கத்தில் 2017-ஆம் ஆண்டு, முதன்முறையாகமகளிர் மட்டும்நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது.  தமிழ்ச்சங்கத்தின் அனைத்துக் கலை நிகழ்ச்சிகளிலும் பெண்கள், தங்கள் குழந்தைகளின் நிகழ்ச்சிகளுக்காக அவர்களைக் கவனிப்பதிலேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள்இவை ஏதுமில்லாமல் ஒரு நிகழ்ச்சி, பெண்களுக்காகவே மட்டும் அவர்கள் பார்த்து, ரசித்து, கேட்டு, விளையாடி உற்சாகமாய்க் களிப்புற  என்ற சிந்தனையில் தொடங்கப்பட்டதேமகளிர் மட்டும்’ .

இந்நிகழ்வில் தோழிகள் தங்களது  தனித்திறமைகளை வெளிப்படுத்த  அருமையான வாய்ப்பு. இனிமையான பாடல்களைப் பாடியும், நளினமாக ஆடியும், அருமையான நகைச்சுவைகளைச் சொல்லி சிரித்து மகிழ்ந்தும், யோகா,, உடல்நல, மனநலக் குறிப்புக்களைப் பகிர்ந்தும், சுறுசுறுப்பான விளையாட்டுகளில் பங்கு கொண்டும், உற்சாகத்துடன்  ஆரவாரித்து மகிழ்கிறார்கள். பள்ளி நாட்களையும், கல்லூரி நாட்களையும் மலரும் நினைவுகளாகக் கொணரும் வண்ணம், பெண்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடும் நிகழ்ச்சியாக மகளிர் மட்டும் மலர்கிறது.

இந்நிகழ்ச்சியில் ஒலி, ஒளிபரப்பு, புகைப்படம், காணொளி அமைப்பு, மேடை அலங்காரம் போன்ற அனைத்து வேலைகளையும் பெண்களே பகிர்ந்து கொண்டு எல்லாத் துறைகளிலும் பரிமளிக்கும் திறமை தங்களுக்கு உண்டு என நிரூபிக்கிறார்கள். வரும் காலங்களில், பங்குச் சந்தை நிர்வாகம் போன்றவறைப் பற்றி விவாதிக்கவும், குடும்ப மேம்பாட்டு நலன், சமுதாய நலன் போன்றவற்றை விவாதிக்கும் கருத்தரங்குகளை நடத்தவும் மகளிர் மட்டும் நிகழ்சிச்சியில் பல திட்டங்கள் உள்ளன.

செயிண்ட்லூயிஸ் மட்டுமன்றி, பக்கத்து ஊர்களிலிருந்து தோழிகள் வந்து, கலந்து கொண்டு நட்பு பாராட்டுவது மிக்க மகிழ்ச்சியாக  இருக்கிறது.

மகளிர் மட்டும் காணொளி