முத்தமிழ் விழா

மிசௌரி தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படும்.

இயற் இசை நாடகத் தமிழாய் உறைந்திருக்கும் தீந்தமிழின் தீமினை பாரெங்கும் கமழச் செய்திடும் தமிழுக்கான திருவிழா முத்தமிழ் விழா

பண்டு தமிழ்ச் சங்கத்தை உண்டு பண்ணிய நம்மவர் சீரெல்லாம், விண்டு புகழ்ந்து பாடி இன்னும் வியக்கின்றார் இப்புவியெல்லாம்.. புலவர் நினைப்பையெல்லாம்
பொன்னெழுத்தால் பதித்து நூலாக்கி, நலம் செய்தாரே நம் தமிழ்ப் பெரியோர் நம்மை மேலாக்கி! ஊர் கூடி மனம் மகிழ்ந்து இயல், இசை, நாடகமெனும் முத்தமிழுக்கும் விழா எடுக்கும் நம் சங்கம். சீரிய நடையினிலே எழிலார்ந்த போக்கினிலே ஆண்டுதோறும் சங்கம் எடுக்கும் விழா, அது முத்தமிழ் விழா. எண்ணற்ற நிகழ்ச்சிகள், மாணவ மாணவியர், பூவையர் தம் மேலார்ந்த கலைப்படைப்புகள், ஆடவர்தம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அவ்வப்போதைய அறிவிப்புகளை[ப் பின் தொடர்ந்து, சங்கத்து விழாக்களுக்கு வருகையளித்து பயன் பெற்றிடுவீரே!!

 

 

மிசௌரி தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா காணொளி