Silver Jubliee Malar

மிசௌரி தமிழ்ச்சங்கம் தொடங்கி 25 ஆண்டுகளாகிவிட்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.  
இந்த தருணத்தைக்  கொண்டாட தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழா வரும் 
ஜனவரி 26, 2019 அன்று விமரிசையாக நடைபெற உள்ளது. 

இந்த விழாவினையொட்டி சிறப்பான மலர் ஒன்றை வெளியிட முடிவு செய்துள்ளோம். 
வெள்ளி விழா மலருக்கு தமிழ்ச்சங்க உறுப்பினர்களிடமிருந்து தரமான படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன.  
மலரில் வெளியிட கதைகள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் படங்களை வரவேற்கிறோம். 

கீழ்க்கண்ட கருத்துக்களையொட்டி படைப்புக்கள் அமையுமாயின் அவை விழா மலருக்கு மெருகூட்டும்.
 
•    கடந்து வந்த பாதை (மிசௌரி தமிழ்ச்சங்கம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நிகழ்வுகள்)
•    தமிழ்ப்பள்ளி நிகழ்ச்சிகள் 
•    வட அமெரிக்கப் பேரவையும் மிசௌரி தமிழ்ச்சங்கமும் 
•    மிசௌரி தமிழ்ச்சங்க சாதனையாளர்கள் 
•    விழாவின் மையக்கருத்தான “இயற்கை, கலை, மொழி”


மிசௌரி தமிழ்ப்பள்ளி மாணாக்கர்களும் படைப்புக்களை அனுப்பலாம்.

தங்களின்  அருமையான படைப்புக்களை அனுப்பக்கடைசி நாள்:  
நவம்பர் 30, 2018

படைப்புக்கள் இதுவரை வேறெங்கும் வெளியிடப்படாதவையாக இருத்தல் வேண்டும்

அனுப்பவேண்டிய முகவரி:  
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

வெள்ளிவிழா மலர்க்குழுவின் முடிவே இறுதியானது.

நன்றி.
மிசௌரி தமிழ்ச்சங்க வெள்ளிவிழா மலர்க்குழு